கலாபூக்ஷணம் எஸ்.நடேச சர்மா அவர்கள் காலமானார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரபல ஒலிபரப்பாளர் எஸ்.நடேச சர்மா அவர்கள் 10-11-2023 அன்று காலமானார்.

1975 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக சேர்த்து கொண்ட அவர் , நிரந்தர அறிவிப்பாளர் முதலாந்தர அறிவிப்பாளர் போன்ற பதவிகளை பெற்று , கட்டுப்பாட்டாளர் ஆக பதவி உயர்வு ஆன நிலையில் , 25 வருட சேவையின் பின் ஓய்வுபெற்றார்.

சிறந்த செய்தி வாசிப்பாளரான அவர் , ரூபவாஹினியிலும் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றியதோடு , சமயநிகழ்ச்சிகள் , நேர்முகவர்ணனை , பேட்டிகள் போன்றவற்றில் திறமைகாட்டிய அவருக்கு , கலாபூக்ஷணம் , சைவ நன்மணி போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.


அன்னாரின் பூதவுடல் பொரளை ஜேயரட்ண மலர்மண்டமத்தில் அஞ்சலிக்காக 11-11-2023 சனிக்கிழமை வைக்கப்பட்டு,
12-11_2023 ஞாயிறு மாலை 4.00 மணி அளவில்
இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளது.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி.

தகவல் : Thamby Theva

Leave A Reply

Your email address will not be published.