ஒரு அமைச்சரை தூக்கிவிட்டு , இருவருக்கு அமைச்சு பதவிகளை வழங்கிய ரணில்

நீர்ப்பாசன அமைச்சராக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று (27) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவிடம் கையளித்தார்.

கெபினட் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஒருவரை நீக்கிய முதலாவது ஜனாதிபதி என வரலாற்றில் இடம் பெறப் போகும் முதலாவது ஜனாதிபதி விக்ரமசிங்க என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.