ஊடகவியலாளர் மகேஷ் படுகொலை : வீட்டின் உரிமையாளரான தம்பதியினர் கைது

பிரதான தொலைக்காட்சி ஊடக நிறுவனமொன்றில் உள்ளூர் செய்தியாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய முத்துகல ஆராச்சியைச் சேர்ந்த திரு.மகேஷ் குணசிங்க (வயது 36) என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக வேயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேயாங்கொட, கட்டுவாஸ்கொட பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் நேற்று (30) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.

வல்பொல, ரக்கஹவிலவை வசிப்பிடமாகக் கொண்ட,இரண்டு பிள்ளைகளின் தந்தையான மகேஷ் குணசிங்க கொல்லப்பட்ட போது ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதாக தெரிய வருகிறது.

இவர் 2012-2014 காலப்பகுதியில் சிரச (சக்தி) தொலைக்காட்சி மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவில் பணியாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கொல்லப்பட்ட ஹோட்டலில் அவர் , அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேயங்கொடை, கட்டுவாஸ்கொட என்ற முகவரியில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு அவர் வந்தபோது, ​​இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், காயமடைந்த ஊடகவியலாளரை வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க ஹோட்டலின் உரிமையாளர்களான தம்பதியினர் நடவடிக்கை எடுத்த போதிலும், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. .

இது தொடர்பில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த தம்பதியினரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நேற்று (30) மாலை 7 மணியளவில் கொலையுண்ட ஊடகவியலாளர் குறித்த இடத்திற்கு வந்தபோதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக வேயங்கொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் மாடியில், பெண்ணொருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கையுறையும், இறந்தவரின் கைக்கடிகாரம் என சந்தேகிக்கப்படும் கைக்கடிகாரம் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்த ஊடகவியலாளர் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கு முன்னர் கிடைத்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த போலீசார் ,அவரிடம் இருந்த ஆப்பிள் போனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த இளம் பெண் அழகு நிலைய பணியாளர் என்றும், இறந்த ஒளிப்பதிவாளர் திருமண புகைப்படங்களை எடுக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

எனவே, பணம் தொடர்பாக ஏற்பட்ட மோதலின் விளைவாக இக் கொலை நடந்து இருக்கலாமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பிந்திய இணைப்பு

ஸ்வர்ணவாஹினியின் ஒளிப்பதிவாளர் ஒருவர் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது

வயங்கொடை கட்டுகொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வைத்து மகேஷ் முனசிங்க என்ற ஒளிப்பதிவாளர் கொல்லப்பட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரான தம்பதியினர் ஹோட்டல் மற்றும் அழகு நிலையத்தை நடத்தி வருகின்றனர்.

திரு.மகேஷ் முனசிங்க ஹோட்டலுக்கு வந்த போது இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

மரணம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வீட்டின் உரிமையாளரான தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.