மாணவ – மாணவிகளிடம் ஆபாச வீடியோகளை காட்டிய அலுவலக உதவியாளர் போலீஸ் வலையில்!

மொபைல் தொலைபேசி மூலம் பாடசாலை மாணவ – மாணவிகளுக்கு ஆபாசமான காட்சிகளைக் காட்டிய அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பாடசாலை அதிபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லுனுவில பண்டிரிப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கல்லூரியின் நான்காம் ஆண்டு வகுப்பறையில் வைத்து மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்ட அவர், பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் சில ஆபாச காணொளிகளை காண்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சம்பவம் இடம்பெற்ற போது வகுப்பறையில் ஆசிரியர்கள் எவரும் இல்லை என அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.