77 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சோனியா காந்தி – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மற்றும் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரான சோனியா காந்தி இன்று(09-12-23) தனது 77 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சோனியா காந்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், எதேச்சதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில், உங்களது ஆழ்ந்த பார்வையும், அனுபவமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

இதே போன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.