உக்ரைன் போரில் சண்டையிட இலங்கையில் இருந்து சென்றுள்ள 70 பேர் கொண்ட முன்னாள் இராணுவத்தினர்…

இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேறிய சுமார் 70 முன்னாள் இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரேனிய வெளிநாட்டு படையணி என அழைக்கப்படும் உக்ரேனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படையில் சேர விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனில் உள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கூற்றுப்படி, இந்த முன்னாள் சிறிலங்கா அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகள் ஏற்கனவே அஜர்பைஜான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று போர்க்களத்தில் உயிரிழந்த கப்டன் ரனிஷ் ஹெவகேவின் சிறப்புப் பிரிவில் இணைவதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள் போலந்து வழியாக உக்ரைன் செல்ல காத்திருப்பதாக அந்த இராணுவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

கப்டன் ரனிஷ் ஹெவகேவின் மரணம் குறித்து பிபிசியிடம் தெரிவித்த அதிகாரி ஹத்துருசிங்க, உக்ரைன் ராணுவத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் இலங்கை பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருவதாகக் கூறியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.