மீன் உணவு தொழிற் சாலையின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்வு.

ஜா எலை பிரதேசத்தில் அமைந்துள்ள மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றிற்கு கள ஆய்வு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன் உணவு தொழிற் சாலையின் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்தார்

அத்துடன், அண்மைக் காலமாக தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக புதுப்பொழிவுடன் காணப்படும் பேலியகொட மீன் சந்தையினையும் பார்வையிட்டார்.

அண்மையில் அமைச்சரை சந்தித்த மீன் உணவு உற்த்தி தொழிற்சாலையின் உரிமையாளர்கள், தங்களுடைய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நவீன இயந்தரங்களை பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்  வார விடுமுறை தினமான இன்று (19.09.2020) அதிகாரிகள் சகிதம் குறித்த இடங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர், நியாயமான வட்டி வீதத்தில் வங்கிக் கடனை பெற்றுக் கொள்வதற்கான சிபார்சுகளை வழங்குவதன் ஊடாக மீன்களுக்கான உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம், கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து மேற்கொண்ட பல தீர்க்கமான அறிவுறுத்தல் காரணமாக தற்போது புதுப் பொழிவுடன் காட்சியளிக்கின்ற பேலியகொட மீன் சந்தைக்கான சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன் சந்தைக்கான வாகனத் தரிப்பிடத்தில் ஏற்படுகின்ற இடநெருக்கடிகளை களைவதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பிலும் சந்தையின் நிர்வாகிகளுடன் ஆராய்ந்தார். மேலும் சந்தைப் பகுதியின் பாராமரிப்பு தொரடர்பில் திருப்தி வெளியிட்ட  அமைச்சர், 24 மணித்தியாலங்களும் சுகாதாரத்தினை பேணும் வகையில் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுக்கமான நிலைப்பாட்டையும் நிர்வாகிகளுக்கு வலியுத்தினார்

Leave A Reply

Your email address will not be published.