குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் முன்பே பல வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் வரத் தொடங்கிவிட்டதையும் காண முடிந்தது. வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி.

குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இருந்து காலை புறப்பட்ட மோடி, அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.

குஜராத்தில் 25, கா்நாடகத்தில் 14 (இங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு), மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகா் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேலதிக செய்திகள்

இராவணன் மீண்டும் எழுவானா? – (உபுல் ஜோசப் பெர்னாண்டோ)

ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் எதிர்கொள்ள நான் தயார்! – சஜித் சூளுரை.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் இன்று கைது!

சாவகச்சேரி வைத்தியசாலையில் மேல்நிலை அதிகாரியைத் தாக்கிய தாதி கைது!

மஹரகம வடிகாலில் ஒரு தொகை கடவுச்சீட்டுகள்.

இந்தோ பசிபிக் பிராந்திய இயக்குனருக்கும் NPP தலைவருக்கும் இடையே சந்திப்பு!

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஹமாஸ் : எகிப்து மற்றும் கத்தாரில் இருந்து போர் நிறுத்த முன்மொழிவு.

இந்த எதிர்ப்புக் கோசம் எந்த இலவசக் கல்வி பற்றியது ? – குசல் பெரேரா

ராஃபாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றும் இஸ்ரேல்.

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு கியூஆர் குறியீட்டுக் கட்டண முறையைத் தொடங்க ஜப்பான் இலக்கு.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான்.

தமிழகக் காவல்துறை இணையத்தளத்தை முடக்கிய இணைய ஊடுருவல்காரர்கள்.

சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவன் +2 தேர்வில் சாதனை.

அல்ஜசீரா இஸ்ரேல் அலுவலகத்தில் சோதனை.

ஓட்டு போட்டால் மசால் தோசை இலவசம்!!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா ஹோட்டல்

Leave A Reply

Your email address will not be published.