கொய்யால : விஜய்யின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் படம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் படம் வரும் 2021 பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் நடித்த பிரபலங்கள் அவ்வப்போது பேட்டிகளில் சின்ன தகவலை கூறினாலே அதை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றன ரசிகர்கள்.

இது ஒருபுறமிருக்க இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நேர்காணலில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் அவர் தமிழ் சினிமாவில் நடித்த முதல் 5 படங்களில் கண்டிப்பாக முதலிடத்தை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

அந்த அளவிற்கு வெறித்தனமாக இருக்கும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதையும் தெரிவித்துள்ளார். இதனால் வரும் பொங்கலுக்கு தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கும் என்பது உண்மைதான்.

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆனது தான் மிச்சம் என்பது போன்ற கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. ஏனென்றால் டிரைலர் எப்போது வெளிவரும் அதை திருவிழாபோல் கொண்டாடலாம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தீபவாளிக்கு டிரைலர் கண்டிப்பாக வரும் என எதிர்பாக்கலாம், இது போன்ற செய்தி இன்னும் சுவாரசியத்தை அதிகரித்து தான் வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.