இலங்கை தமிழரசுக் கட்சி மூன்றாக சிதறியது!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ( ITAK ) மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடத்துவதற்கு தயாராகியிருந்த நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி திருகோணமலையில் மாநாட்டை நடத்த தீர்மானித்ததன் மூலம் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மூன்றாக பிளவுபட்டுள்ளனர்.

கட்சிக்கு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக 2024 ஜனவரி 21 ஆம் திகதி திருகோணமலையில் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதுடன் கட்சியின் மத்திய செயற்குழு 26 ஆம் திகதி கூடி இலங்கை தமிழரசுக் கட்சி கட்சியின் 17 ஆவது ஆண்டு விழாவை ஜனவரி 27 ஆம் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆனால் கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு ஒன்று இதற்கு முன் நடத்தப்படாத நிலையில் , இப்போது வாக்கெடுப்பு ஒன்று நடப்பதால் கட்சிக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் குழு அங்கத்தவர்கள் கூறுகின்றனர்.

கட்சிக்கு தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் முடிவெடுக்க இன்னும் இடமுள்ளது எனக் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் இரண்டு மூன்று பேரின் அதிகார பேராசையால் கட்சியே அழிந்து போய்க் கொண்டிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைமைத்துவத்திற்கு ஏற்கனவே மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் நெருங்கும் போது இந்த நிலைமை மேலும் மாறலாம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலைக் கிளைக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், கட்சிக்கு உதவிய பெருமளவிலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையிலேயே , கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை திருகோணமலையில் நடத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது என கட்சியின் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.