பாதாளக் குழு உறுப்பினர் ரொஷானும் அவரின் நண்பரும் சுட்டுப் படுகொலை! – தென்னிலங்கையில் அதிகாலை பயங்கரம்.

கொழும்பு, புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் 2 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன என்று பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்கவில் உள்ள ஏல காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற ஜீப்பில் ஒருவரின் சடலம் காணப்பட்டதுடன், மற்றைய சடலம் அருகில் காணப்பட்டது.

ஜீப்புக்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழு உறுப்பினர் காரியவசம் அத்துகோரல ரொஷான் இந்திக்க என்றழைக்கப்படும் மன்னா ரொஷானின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

30 மற்றும் 37 வயதுகளுடையவர்கள் இவர்கள். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலால் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.