பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்

பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதில், நவம்பர் 2022க்கு முன்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களும்

நவம்பர் 2022 மற்றும் ஏப்ரல் 2023இல் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறத் தகுதியான இளநிலை, முதுநிலை, ஆய்வில் நிறைஞர், பட்டயம், பட்ட சான்றிதழ் படிப்பு படித்த மானவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், திருச்சி விமானநிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் திறக்கவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.