ஆண்மை பறிபோகும் காய்ச்சலை பரப்பும் சீனா..கொரோனாவை அடுத்து மற்றோர் ஆபத்து!

சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய் தொற்றிலிருந்து மீளமுடியாமல் உலக நாடுகளே திக்குமுக்காடி வருகிறது.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்தால் மட்டுமே, ஒரு முடிவு கிடைக்கும் என்ற உறுதியுடன் உலக நாடுகளே போட்டிப் போட்டுக் கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சீனாவில் தற்போது புதிதாக பாக்டீரியா தொற்றுநோய் பரவி வருகிறது என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுவரை இந்த நோய் தொற்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நோயானது கால்நடைகளுடனான தொடர்புடைய ‘ப்ரூசெல்லா’ என்ற பாக்டீரியா மூலம் பரப்புவதாகவும், இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் என்றும், இதனுடைய பாதிப்பு வாழ்நாள் முழுவதும் பக்கவிளைவை ஏற்படுத்தும் என்றும் ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மால்டா காய்ச்சல்’ என இந்நோய்க்கு பெயரிடப்பட்டு, நோயின் அறிகுறியாக தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதாக தெரிகிறது. இந்த அறிகுறிகள் எல்லாம் சிறிது காலம் கழித்து குறைந்துவிடும் ஒரு சில பேருக்கு நீண்ட நாட்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

இது மட்டுமல்லாமல் இந்த நோய்தொற்றினால் சில உறுப்புகளில் வீக்கம் அல்லது மூட்டு வலி போன்ற நிரந்தர தாக்கமும் ஏற்பட கூடும். பெரும்பாலும் இந்த நோய் தொற்று மனிதர்களிடையே பரவுவது கொஞ்சம் அரிதானது தான்.

அசுத்தமான உணவை உட்கொள்வதாலும், பாக்டீரியாவை சுவாசிப்பதினாலுமே இந்த நோய்தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மத்தியில் லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ‘ப்ரூசெல்லா தடுப்பூசிகள்’ கண்டுபிடிக்கப்பட்ட போது ஏற்பட்ட வாயுக் கசிவின் போது பரவிய அனைத்து பாக்டீரியாவும் முழுமையாக அளிக்கப்படாதது தான், இந்தக் கொடிய நோய்தொற்று பரவலுக்கு காரணம் என்று CNN தொலைக்காட்சியில் பகிரங்கமாக சீனாவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மருந்து கண்டுபிடிக்கிறேன் என்ற பெயரில் புதுப்புது வைரஸை பரப்பி விடும் சீனாவின்மீது உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமரமக்கள் தொடங்கி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக கொட்டித் தீர்க்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.