யாழ். காரைநகர் மாணவர், லண்டன் ரயிலில் வைத்து குத்திக்கொலை

யாழ். காரைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (11) லண்டனில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய அனோஜன் என்ற மாணவன் , லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்கு சென்று , ரயிலில் வீடு திரும்பும் போது , தென்மேற்கு லண்டனில் உள்ள ட்விகன்ஹாம் (Twickenham) பகுதியில் வைத்து ,இந்த கத்திக் குத்து சம்பவம் நடந்துள்ளது.

உடனடியாக செயல்பட்ட ரயில் பயணிகள் , மாணவனை கத்தியால் குத்திய 4 பேரையும் பிடித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுள்ளனர். பிடிபட்ட நான்கு பேரையும் ட்விகன்ஹாம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவம் குறித்து லண்டன் ட்விகன்ஹாம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.