15 வயது மாணவன் கடலில் மூழ்கிச் சாவு.

15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அம்பலாந்தொட்டை தர்மபால மாவத்தையைச் சேர்ந்த மேற்படி மாணவன் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று அம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் கடலில் மூழ்குவதைக் கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக அவரை மீட்டு அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சேர்த்தபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.