கடும் பனி: தில்லியில் விமான சேவை பாதிப்பு

கடும் பனிமூட்டத்தால் தில்லியில் 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

தலைநகர் தில்லியில் செவ்வாய்கிழமை நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்திலிருந்து புறப்படும் சுமார் 30 விமானங்கள் தாமதமானதாகவும், வானிலை காரணமாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். .

குறைந்தபட்ச வெப்பநிலையாக 5 டிகிரி செல்சியஸ் பதிவானதாகவும், ஏராளமான பயணிகள் அவர்களது உடைமைகளுடன் விமான நிலையத்தில் காத்திருப்பதைக் காண முடிந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

“எனது விமானம் காலை 8:40 மணிக்கு புறப்பட இருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக காலை 10:30 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது” என்று பயணி ஒருவர் கூறினார்.

இதற்கிடையில், தில்லியில் நிலவிய பனிமூட்டம் மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக 30 ரயில்கள் தாமதமாக வந்தடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.