திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போதே விபத்தில் சனத் பலி – வேதனையில் புதுமணத் தம்பதி.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றுக்குச் சென்றுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்ற அவர், இரவு சமூக ஊடகச் செயற்பட்டாளர் ஒருவரின் திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்போதே விபத்தில் சிக்கியுள்ளார்.

திருமணமான மணமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எனக்காக – என்னைப் பார்க்க வந்த பயணத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படித் தாங்கிக்கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா.” – என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.