அயோத்திக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்

அயோத்திக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் முன்கூட்டியே தெரியப்படுத்துங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயிலில், திங்கள்கிழமை கோலாகலமாக பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஸ்ரீபால ராமரை தரிசித்துவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இதனால், பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், பக்தர்களை வரிசைப்படுத்த அதிரடிப் படையினரையும், மத்திய ரிசர்வ் காவல் படையையும் பணியமர்த்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், அயோத்திக்கு அடுத்த 7 முதல் 10 நாள்களுக்குள் வர திட்டமிட்டிருக்கும் முக்கிய பிரமுகர்கள், தங்களது வருகை குறித்து உள்ளூர் நிர்வாகம் அல்லது ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அல்லது உத்தர பிரதேச மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை வரை சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் பலரும், கோயிலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்கும் நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் முக்கிய சாலைகள் பலரும் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகள் நடந்தாலும் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடுமையான நெரிசல் காணப்படுகிறது. அனைத்தையும் சீர் செய்ய கோயில் நிர்வாகமும் திட்டமிட்டு வருகிறது.

மேலதிக செய்திகள்
சோசல் மீடியாக்களில் மற்றவர்களை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டால் ஆப்பு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்

நாடு நெருக்கடியான வேளையில் தென்னிந்திய நடிகைகள் ஏன் வந்தார்கள்? :ஜீவன் தொண்டமான் பதில்

இந்தியா – இலங்கை இடையே விரைவில் பாலம்!

65 போர்க்கைதிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.

13ஆவது திருத்தத்தைப் பலவீனப்படுத்தியது தமிழ்க் கட்சிகளே! – நீதி அமைச்சர் குற்றச்சாட்டு.

இவ்வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் – ரணில் உறுதியாகவுள்ளாராம்.

“மயிலத்தமடு எங்கே இருக்கின்றது?” – இப்படிக் கேட்டார் நீதி அமைச்சர்.

யாழில் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தை, மகன் பலி! – தாய் படுகாயம்.

திருமண நிகழ்வுக்குச் சென்றுவிட்டு திரும்பும்போதே விபத்தில் சனத் பலி – வேதனையில் புதுமணத் தம்பதி.

Leave A Reply

Your email address will not be published.