இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் திருமதி. பவதாரணி சற்று முன் காலமானார்.

கல்லீரல் புற்றுநோய்க்கு இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.


வசீகரிக்கும் காந்த குரலுக்கு சொந்தமான இவர் பாடிய அனைத்துமே ஹிட் பாடல்கள்தான்.

தற்போது ராமர் கோவில் விழாவிலிருந்து இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் அன்பு சகோதரியும், கங்கை அமரனது பெறாமகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.


பிந்திய இணைப்பு

பின்னணி பாடகி பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 47. கேன்சர் பாதிப்பால் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.

ராமன் அப்துல்லா புதிய கீதை உள்ளிட்ட படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார். பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருது வாங்கினார்.

பின்னணி பாடியது மட்டுமல்லாது , பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பவதாரிணி (Bhavatharini)(23 சூலை 1976 – 25 சனவரி 2024) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகரும் ஆவார்.இவர் இசையமைப்பாளர் இளையராசாவின் மகள் ஆவார்.

இவருடைய உடன்பிறப்புகளான கார்த்திக் இராசா, யுவன் சங்கர் இராசா ஆகியோரும் இசையமைப்பாளர்கள் ஆவர்.

இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் அமையும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

Leave A Reply

Your email address will not be published.