அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்திய புத்திஜீவிகளை சந்தித்தனர்

இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் , தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று (06) புதுடில்லியில் Observer Research Foundation புத்திஜீவிகளை சந்தித்தனர்.

அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுப்பதில் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் வணிக சமூகத்திற்கு ஆலோசனை சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும்.

பின்னர் இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்குச் சென்ற பிரதிநிதிகள் குழு அதன் தலைவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியது.

பின்னர் இன்று (06) பிற்பகல் தேசிய மக்கள் படையின் தலைவர்கள் அகமதாபாத் நகருக்கு புறப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.