யாழ். வந்தார் தமன்னா! (Video)

பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, புகழ் உள்ளிட்டவர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

பிரபல தென்னிந்தியப் பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்தியக் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை தமன்னா உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தபோது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

மேற்படி இசை நிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குநர் கலா மாஸ்டர் மற்றும் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட கலைஞர்கள் பலர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.