வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட இன்சாட்-3DS

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.

இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 2,275 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளில் 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. புவியின் பருவநிலை மாறுபாடுகளை கண்காணித்து தகவல்களை துல்லியமாக இன்சாட்-3 டிஎஸ் தரும்.

8 நிமிடங்களில் 36.000 கி.மீ. தூரத்தில் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், நிலம் மற்றும் கடல் சார்ந்த வானிலை முன்னறிவிப்புகளை கொடுக்கும்.

காட்டுத் தீ, புகை, பனி, பருவநிலை குறித்து ஆய்வுகளை நடத்த வழிவகுக்கும் 4 விதமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன

இம்மேஜரி கருவி துல்லியமான வானிலையை உணர்த்தும்

ஈரப்பசை, காற்று திசை உள்ளிட்டவற்றை அறிய 19 சேனல்கள் உள்ளன

ஏற்கெனவே செயல்படும் செயற்கைகோளுடன் இணைந்து செயல்படும்

மிகத் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள் பெறப்படும்

இந்த செயற்கை கோளுக்கு “நாட்டி பாய்” என இஸ்ரோ செல்லப் பெயரிட்டுள்ளது. விண்ணில் 10 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோளால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத்
வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறிந்து சொல்லும் இன்சாட்-3டிஎஸ் என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு புதிய தலைமுறை செயற்கைக்கோள். வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக உடனுக்குடன் தரக்கூடிய திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். செயற்கைக்கோளின் சோலார் பேனல்கள் சரியான முறையில் இயங்குகின்றன. செயற்கைக்கோள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஜிஎஸெல்வி 14, இன்சாட் 3டிஎஸ் மற்றும் செயற்கைக்கோளில் உள்ள பேலோட் எனப்படும் தரவுகளைச் சேகரிக்கும் அமைப்பை தயாரித்த அனைவருக்கும் பாராட்டுகள். ஜி.எஸ்.எல்.வியின் அடுத்த திட்டம் நாசாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.” எனக் கூறினார்.

மேலதிக செய்திகள்

நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.

மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.

முதலாவது T20 யில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மனித – மிருக மோதலை தடுக்க வலியுறுத்தி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்

Leave A Reply

Your email address will not be published.