விரைவில் கூகுள் தரவுள்ள அதிரடி மாற்றம்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கிவருகின்றது.

இவற்றில் மின்னஞ்சல் சேவையும் ஒன்றாகும்.

ஜிமெயில் எனப்படும் இம் மின்னஞ்சல் சேவையில் விரைவில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜிமெயிலின் லோகோவில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

தற்போது உள்ள லோகோவானது 2013 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதாகும்.

இந்த லோகோவில் இருக்கும் கடித உறை வடிவில் பிரதானமாக மாற்றம் ஏற்படுத்தப்படும் என தெரிகிறது.

எவ்வாறெனினும் கூகுள் நிறுவனத்தின் பிரதான வர்ணங்களான நீலம், மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் புதிய லோகோவிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.