சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகத்திடம் இன்று கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்றம் கூடியுள்ளது. இதன்போது எதிரணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம்; தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரைகள் சில உள்வாங்கப்படாமல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும், அதில் கையொப்பமிட்டு சபாநாயகர் அரசமைப்பையும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் மீறியுள்ளார் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொலிஸ்மா அதிபர் நியமனம்கூட அரசமைப்புக்கு முரணாகவே இடம்பெற்றுள்ளது எனவும் எதிரணியில் குறிப்பிட்டுள்ளன.

இவற்றை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.