6 மீனவர்கள் சிறைப்பிடிப்பு: தொடர்கின்றது போராட்டம்.

சீஷெல்ஸில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு அந்த நாட்டின் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் கடற்றொழிலாளர்கள், இன்று 9ஆவது நாளாகவும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

தம்மை உடனடியாகச் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பக் கோரி மார்ச் 1ஆம் திகதி அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

லொரென்சோ புத்தா 4 என்ற பல நாள் மீன்பிடி இழுவை படகில் பயணித்த 6 பேரே இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

லொரென்சோ புத்தா 4 என்ற விசைப்படகு ஜனவரி 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் இருந்து தனது முதல் பயணமாகப் புறப்பட்டது.

இந்தநிலையில் அதில் பயணித்த 6 பேரும் சிலாபம் மாரவில பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய குழுவொன்றால் அவர்கள் பிடிக்கப்பட்டனர்.

எனினும், பின்னர் சீஷெல்ஸ் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்தே அவர்கள் தற்போது சீஷெல்ஸ் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.