மொட்டுவின் வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.

கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பஸில் ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தின்போது தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

அமெரிக்காவில் இருந்து பஸில் நாடு திரும்பிய பின்னர், மஹிந்தவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்திப்புப் பேச்சு நடத்தி இருந்தார்.

இதன்போது அடுத்த தேர்தல், அரச கூட்டணி உறவு மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு ராஜபக்ஷக்கள் நேரடிப் பதிலை வழங்கவில்லை.

இந்நிலையிலேயே மொட்டுக் கட்சியின் உயர்பீடம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் எட்டப்படும் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவுடன் மஹிந்த, பஸில் இரண்டாம் சுற்றுச் சந்திப்பை நடத்தவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது அடுத்த தேர்தல், கூட்டணி தொடர்பில் இறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.