வெனிசுலா அதிபர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

ஹுகோ சாவேஸுக்குப் பிறகு வெனிசுலாவில் பிறந்த தலைசிறந்த தலைவர் என்று கூறப்படும் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசுலாவில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக 61 வயதான மதுரோவை அந்நாட்டின் ஆளும் கட்சியான ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி ஏகமனதாக நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸின் நெருங்கிய ஆதரவாளராக இருந்த மதுரோ, 2013ஆம் ஆண்டு சாவேஸின் மறைவுக்குப் பிறகு அந்நாட்டின் அதிபரானார், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அபார வெற்றியைப் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.