வரிகளை நீக்கினால் பேச்சுக்கு தயார் – சீனா திட்டவட்டம்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா தயார் என்று கூறியுள்ளது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன் அமெரிக்கா விதித்துள்ள வரிகளை நீக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரை வரி விதித்தது. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்க பொருட்களுக்கு 125% வரி விதித்தது.
அமெரிக்கா பேச்சு நடத்த விரும்பினால், அதன் தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், ஒருதலைப்பட்சமான வரிகளை ரத்து செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
அமெரிக்கா வரி விதிப்பு குறித்துப் பேச்சு நடத்த சீனா முயன்றதாக டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கு, சீனா இந்த பதிலை அளித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் வலுவடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என்று சீனா தனது விமான நிறுவனங்களுக்கு தடை விதித்தது.