ஜப்பானிய சந்தையில் இருந்து 3 வகையான சிவப்பு அரிசிக்கு தடை.

நாடு முழுவதிலும் உள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இருந்து சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் மூன்று வகையான எரிசக்தி சப்ளிமெண்ட்களை உடனடியாக நீக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் எரிசக்தி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாலும், மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் ஜப்பான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய சுகாதார அமைச்சு அண்மையில் ஒசாகாவை தளமாகக் கொண்ட மூன்று உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்ட் மற்றும் சிவப்பு அரிசியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பெனி கோஜி எனப்படும் கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பயன்படும் அந்த வகையான ஆற்றல் உணவுப் பொருட்களில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும் சிட்ரைனின் நச்சுகள் உருவாகும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற நொதித்தல் செயல்முறை.

அண்மையில் உயிரிழந்த நால்வருக்கும் இந்த ஆற்றல் சப்ளிமெண்ட்ஸ் உட்கொண்டதால் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் இருவர் 2021 ஆம் ஆண்டு முதல் உணவு நிரப்பி மாத்திரைகளைப் பயன்படுத்தியதாகவும், மேலும் ஒருவர் 2022 ஆம் ஆண்டு முதல் உணவுப் பொருள்களுக்கு அடிமையாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.