மைத்திரியின் ஈஸ்டர் தாக்குதல் கருத்தால் இலங்கையில் கொதி நிலை

ஜனாதிபதி அபேட்சகர் ஊகங்கள் கொதி நிலையை நோக்கி நகரும் நேரத்தில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

அந்த அறிக்கை தற்போது அரசியல் களத்தை தீப்பற்றி எரிய வைத்துள்ளது.

பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மைத்திரிக்கு அழைப்பாணை விடுத்து, சம்மனின்படி அண்மையில் மைத்திரி அங்கு சென்று ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆனால் அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து எந்த தரப்பினரிடமும் எந்த தகவலும் இல்லை. இருந்தபோதிலும், அன்று மாலை, பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில ஹிரு அலைவரிசையில் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இது தொடர்பில் விசேட வெளிப்படுத்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.

சமுதித சமரவிக்ரமவின் கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ஏதோ ஒரு அரசோ அல்லது சில அமைப்புகளோ இருப்பதாக மைத்திரிபால நினைக்கிறார். இது தொடர்பாக சமுதித , கம்மன்பிலவை துருவித் துருவி வினவியபோது, ​​மைத்திரியின் வாக்குமூலத்தில் சில தகவல்களை கம்மன்பில எப்படி வெளியானது என்பதும் தெரிய வந்தது. அதன்படி மைத்திரியின் கூற்று குறித்த தகவல் கம்மன்பிலவுக்கு எங்கிருந்தோ கிடைத்துள்ளமை தெளிவாகக் தெரிந்தது.

ஊடக கசிவு

அதே சமயம் பத்திரிகையொன்று மைத்திரி இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய அறிக்கையை ‘அசாதாரணமானது’ என்ற தலைப்பில் வெளியிட்டது. அதன்படி மைத்திரியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக நம்புகிறோம். எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் 4ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலன்னறுவை மைத்திரியின் வீட்டிற்கு சென்ற வெளிநாட்டு தூதுவர் யார்?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னரான, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொலன்னறுவையில் உள்ள மைத்திரியின்

வீட்டிற்கு, விசேட நபரொவர் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  அது வேறு யாருமல்ல, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் ஆகும்.

மைத்திரியின் வேண்டுகோளுக்கிணங்க பொலன்னறுவை சென்ற சீன தூதுவர், பொலன்னறுவையில் உள்ள பல பாடசாலைகளின் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வைத்தார். சீனத் தூதுவர் பொலன்னறுவையில் மூன்று நாட்கள் தங்கியிருந்ததாகவும், பொலன்னறுவையில் இன்னும் பல திட்டங்களுக்கு ஆதரவளிக்க மைத்திரியிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்திரியின் சர்ச்சைக்குரிய ஈஸ்டர் தாக்குதல் கதை இந்த சந்திப்பின் இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் வெளிவந்தது.

அதன்படி, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் போது, ​​அடுத்த சில மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்பதை அறியலாம். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த காலங்களில் நிலவி வந்த பனிப்போரை ஓரளவுக்கு அமைதிப்படுத்த அரசு முயற்சித்தாலும், கடந்த இரண்டு மூன்று வாரங்களில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் மீண்டும் மோதல் வெடிக்கத் தொடங்கியிருப்பது தெரிகிறது. சாம்பலின் கீழ் ஒரு நெருப்பினால் , இலங்கை பாரிய இராஜதந்திர நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுவதாக தெரிகிறது.

ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.