அருணாச்சல்லில் 30 இடங்களுக்கு புதிய பெயரிட்ட சீனா.. மத்திய அரசு எச்சரிக்கை

அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியுள்ள நிலையில், இடங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதும், பெயர்கள் சூட்டுவதும் ஏற்புடையதல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருவதோடு, அதை தெற்கு திபெத் என்றும் சீனா கூறி வருகிறது. அத்துடன், தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சீனா பெயர்களை மாற்றி வருகிறது.

அண்மையில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி மற்றும் ஒரு மலைப்பாதைக்கு புதிய பெயர்களை சூட்டி, அதிகாரப்பூர்வமாக சீனா அறிவித்துள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம்தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சொந்தம் கொண்டாடுவதும், பெயர்கள் சூட்டுவதும் ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள அவர், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே ராணுவம் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது இந்தியாவை சீண்டிப்பார்ப்பதையே சீனா வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக தற்போது தேர்தல் நேரம் என்பதால் சீனாவின் இந்த செயல் உலகளவில் கவனம் பெற்றிருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லைக்கோடு இருப்பது போல சீனாவில் மிகச்சரியான எல்லை கட்டுப்பாட்டு கோடு ஏதும் இல்லை என்பதும் இந்த பிரச்சனை அடிக்கடி எழ முக்கிய காரணமாகும்.

மேலதிக செய்திகள்

மைத்திரி வீசிய குண்டால் இலங்கையில் கொதி நிலை : சாம்பலின் அடியில் தீ

வித்தியா படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் ஒருவர் மரணம்!

Leave A Reply

Your email address will not be published.