சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வியாஸ்காந்த்:ஆனால் போட்டியில் பங்கேற்கவில்லை

பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க 2024 ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகினார்.

அவருக்கு பதிலாக மற்றொரு இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.



வியாஸ்காந்த் இலங்கை தேசிய அணியில் இதுவரை அறிமுகமாகாத போதும், லங்கா பீரிமியர் லீக் (LPL), பங்களாதேஷ் பிரீமியர் லீக், அபு தாபி T10 மற்றும் ILT20 போன்ற தொடர்களில் விளையாடி சர்வதேச அனுபவத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.