நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, போராட்டம்.

நேபாளத்தில், மீண்டும் மன்னராட்சி முறையை நடைமுறைப்படுத்தக்கோரி, போராட்டம் வெடித்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தில், 2008ல் மன்னர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது அங்கு ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களில், முன்னாள் மன்னர் ஞானேந்திராவின் ஆதரவாளர்கள், மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் நடத்தினர்.

மேலும், போலீசார் அமைத்திருந்த சாலை தடுப்புகளை உடைத்து போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர்.

இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் எங்கள் மன்னரையும், நாட்டையும் எங்கள் உயிரை விட அதிகமாக நேசிக்கிறோம். மன்னர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

‘குடியரசை ஒழிக்க வேண்டும். தற்போதைய ஆட்சி முறையில் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.