மைத்திரி முன்னேஸ்வரம் கோவிலில் பிரார்த்தனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நீடிப்பதால் கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இரு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தை திறந்து வைத்து அதிகாரத்தை கைப்பற்றி கட்சியின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் அமைச்சர் நிமல் சிறிபாத சில்வா அணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பு உடனடியாக மாற்றப்பட்டு, தலைமை என்ற புதிய பதவி நிறுவப்படும் என்றும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இனி அதன் தலைவர் பதவியில் அமர்த்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு குழுவிற்கு கட்சியின் அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குழு தெரிவித்துள்ளது.

நிமல் சிறிபால சில்வாவை பதில் ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதாகவும், அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி புத்தாண்டு பண்டிகை காலத்தின் பின்னர் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என இரு குழுக்களின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னேஸ்வரம் கோவிலில் சிறப்பு பூஜை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  கட்சிக்குள்  எழுந்துள்ள சதிகளுக்கு எதிராக இன்று (11) முற்பகல் 10.00 மணிக்கு சிலாபம் முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில் விஷேட பூஜையொன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் தொகுதிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் பங்குபற்றும் விசேட செய்தியாளர் மாநாடு சிலாபம் முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தில்  இன்று இடம்பெறவுள்ளதாகவும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்வார்கள் எனவும் கட்சி அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.