சிங்கப்பூர் விமான நிலையம், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த சிங்கப்பூர் விமான நிலையம், இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. கத்தாரின் தோஹா விமான நிலையம் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஸ்கைட்ராக்ஸ் என்ற நிறுவனம், விமான நிலையங்களை தரவரிசைப்படுத்தி விருது வழங்கி வருகிறது. பயணிகளின் திருப்தி அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலகில் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டது.
அதில் கத்தாரின் தோஹா ஹமாத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தை பிடித்தது.

கடந்த 12 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
தென் கொரிய தலைநகர் சியோலின் இன்சியோன் விமான நிலையம் 3வது இடத்தை பிடித்தது. மேலும் பெரும்பான்மையான குடும்பத்தினர் விரும்பும் விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா மற்றும் நரிடா விமான நிலையங்கள் முறையே 4வது மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளது.
6வது இடத்தில் பாரீஸ் விமான நிலையமும்,
7 வது இடத்தில் துபாய் விமான நிலையமும்,
8 வது இடத்தில் ஜெர்மனியின் முனிச் விமான நிலையமும்,
9 வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் விமான நிலையமும்
10 வது இடத்தை துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையமும்
11 வது இடத்தில் ஹாங்காங் விமான நிலையமும்
12 வது இடத்தில் ரோம் விமான நிலையமும்
13 வது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையமும்
14 வது இடத்தில் பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையமும்
15வது இடத்தில் ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையமும்
16வது இடத்தில் ஜப்பானின் சென்டையர் நகோயா விமான நிலையமும்
17 வது இடத்தில் கனடாவின் வான்கூவர் விமான நிலையமும்
18 வது இடத்தில் கன்சாய் விமான நிலையமும்
19 வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையமும்
20 வது இடத்தில் டென்மார்க்கின் கோபன்ஹகேன் விமான நிலையமும் உள்ளன.

இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் அமெரிக்க விமான நிலையங்கள் எதுவும் இல்லை. சியாட்டில் டகோமா விமான நிலையம் கடந்த ஆண்டு 18 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 24 வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பல நாடுகளின் விமான நிலையங்கள் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நியூயார்க்கின் ஜான் கென்னடி விமான நிலையம் 5 இடங்கள் சரிவைச் சந்தித்து 93வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. நியூயார்க்கில் உள்ள லகார்டியா விமான நிலையம் 57 வது இடத்தில் இருந்து 33வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. லண்டன் விமான நிலையம் 21வது இடத்திலும், காட்விக் விமான நிலையம் 48 வது இடத்திலும் உள்ளன. ஜப்பானின் ஒகினவா விமான நிலையம், 199வது இடத்தில் இருந்து 91வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.