இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் எரிமலை.மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்.

இந்தோனேஷியாவில் வெடித்து சிதறும் எரிமலையால், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வேகமாக வெளியேறும் சாம்பல் படர்வதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. இங்குள்ள சுலவேசி தீவின் வடபகுதியில் உள்ளது மவுன்ட் ருவாங்க் எரிமலை.

நேற்று முன்தினம் இந்த எரிமலையில் சீற்றம் ஏற்பட்டு, சாம்பல் வெளியேறத் துவங்கியது. தொடர்ந்து ஐந்து முறை அடுத்தடுத்து எரிமலை வெடித்து சிதறியது. நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக வெண்புகையுடன் கூடிய சாம்பல், மலைக்கு மேல் 500 மீட்டர் உயரத்துக்கு வெளியேறியது.

இதையடுத்து, எரிமலை அருகேயுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு அறிவித்தது. இதையடுத்து, 800க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறினர். மேலும், 11,000 பேரை வெளியேற்றும் பணி தீவிர மாக நடைபெறுகிறது.

தொடர்ந்து எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் காரணமாக, மானடோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.