திருப்பி அடிக்கும் கேரளா பெண் போராளிகள்!

சமூக ஊடகங்களில்  பெண்களை அவதூறாக  பேசி யூடுயூபில்  பதிவேற்றம் செய்த விஜய் பி நாயர் என்ற நபர், பெண் பேராளிகளால் கேரளா தலைநகரம் திருவனந்தபுரத்தில் கடுமையாக தாக்கப்பட்டார்.

பாக்யலட்சுமியின் புகாரின் அடிப்படையில் விஜய் பி நாயர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், குறிப்பிட்ட நபர் வீடு தேடிப்போய் தாக்கிய  டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்யலட்சுமி மற்றும் பெண் ஆர்வலர்கள் தியா சனா மற்றும் ஸ்ரீலட்சுமி அரக்கல் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் தம்பனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சம்பவ காணோளி :

பெண்கள் குழு, விஜய் பி நாயரின் வீட்டில் அத்து மீறி நுழைந்து கன்னத்தில் அடித்து, உடுத்திருந்த வேட்டியை அவிழ்த்து மோட்டார் கரி எண்ணையை ஊற்றி, கெட்ட வார்த்தைகளால்  திட்டி, மன்னிப்பு கேட்க வைத்ததுடன் அலுவலகத்தில் இருந்த மடிக்கணினி, கைபேசியையும் வலுக்கட்டாயமாக பறித்து சென்றுள்ளனர்.

பெயர் குறிப்பிடவில்லை என்றிருந்தாலும், பொது சமூகம் தெரியும் விதம் பெண் அடையாளங்களை பகிர்ந்த படி குறுக்கு வழியில் சில பெண்கள் சமூகத்தில் பெற்ற அதிகாரங்களை பற்றி காணொளியில்  பேசியிருந்தார். அவ்வகையில் கேரள மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்தவரும் பெண் ஆர்வலர்   எழுத்தாளர் கவிஞர் சுகதகுமாரியில் துவங்கி  தற்போது திரைப்படங்களில் குரல்கொடுத்து வரும் பெண் ஆர்வலரான பாக்கிய லக்‌ஷிமி வரை மேற்கோள் காட்டி, கேரளா பெண் போராளிகளை மிகவும் கீழ்மையாக பேசி பதிவேற்றியிருந்தார் விஜய் பி நாயர்.

இருப்பினும் சட்டப்படி அணுகாது வலுக்காட்டாயமாக வீடு புகுந்து அடித்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததை கேரளாவின் ஒரு சமூகம் வண்மையாக கண்டித்துள்ளது.

சட்டத்தை ஆணோ பெண்ணோ, தாங்கள் கையில் எடுப்பது சமூகத்தின் அமைதியை குலைப்பதுடன் தவறான முன் உதாரணம் ஆகி விடும்  என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பாக்யலட்சுமி கூறியிருப்பதாவது இது அவதூறு பரப்பும் ஆண்களூக்கான எச்சரிக்கை .  வட இந்தியாவை போன்று உடன் தண்டனை கொடுக்க வேண்டியது அவசியம். அதன் துவக்கம் மட்டுமே இது என்று கூறியுள்ளார். காவல்நிலையத்தில் விஜய் பி நாயரை பற்றி கொடுத்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் தாங்கள் களத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரச்சினையின் போக்கை கண்டு கேரளா அரசும் தலையிட்டுள்ளது. சமூக ஊடக சட்டங்கள் பற்றியும் சமூக ஊடகத்தில் பெண்களின் பாதுகாப்பு பெண்கள் தாக்கப்படுவதை பற்றியும் விவாதித்து வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.