நாட்டிற்காக தனது தாய் தாலியை தியாகம் செய்தவர் – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில், பெங்களூரு ஊரகம் , வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பெங்களூரு, மாண்டியா, மைசூர் ஆகிய 6 இடங்களுக்கு மட்டும் வரும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் தேசிய கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெற்கு பெங்களூரு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை ஆதரித்து ரோட் ஷோ சென்றார்.

இதே போன்று பெங்களூருவில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜக மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடியின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய பிரியங்கா காந்தி, நாட்டிற்காக தனது தாய் தாலியை தியாகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, தனது சகோதரிகள் தாலியை அடமானம் வைக்க நேரிட்ட போது பிரதமர் எங்கே இருந்தார் என்று வினவியுள்ளார்.

“இந்தியா” கூட்டணி கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கர்நாடகா சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மாநிலத்தில் காங்கிரஸ் நிறைவேற்றிய வாக்குறுதிகள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருப்பதாக கூறினார்.

இதே போன்று மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவில், 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றை மோடி மற்பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.றும் அமித்ஷாவால் நீக்க முடியாது என்று கூறினார்.

மேலதிக செய்திகள்

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள்! உங்கள் ‘பண டீல்’ விடிவுக்கான பயணத்தில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்!! – புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் சுமந்திரன் எம்.பி. பகிரங்கக் கோரிக்கை.

மலையக மக்களை இலங்கையின் அர்த்தமுள்ள குடிகளாக்கும் பொறுப்பு பிரிட்டனுக்கு உண்டு! – உயர்ஸ்தானிகரைச் சந்தித்த திலகர் வலியுறுத்து.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ரூ. 1700 கிடைக்குமா? – இன்று கூடுகின்றது சம்பள நிர்ணய சபை.

ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை! – 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

நாமலுக்குக் கிடைத்த பதவியால் கடும் அதிருப்தியில் பஸில் – சமல்.

பெண்ணுக்குப் போதை ஊசி செலுத்தி 10 பேர் கொண்ட கும்பல் வன்புணர்வு! – யாழில் கொடூரம்.

லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

Leave A Reply

Your email address will not be published.