அர்ஜென்டினாவைச் சேர்ந்த 60 வயது பெண், அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தலைநகராக பியூனஸ் அயர்ஸ் மாகாணம் உள்ளது. இம்மாகாண அளவிலான அழகி போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், லா பிளாட்டா என்ற பகுதியைச் சேர்ந்த, 60 வயதாகும் அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் பங்கேற்றார். இவர், வழக்கறிஞர் மற்றும் பத்திரிகையாளர்.

இந்நிலையில், பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடந்த, ‘பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகி போட்டி – 2024’ பட்டத்தை, அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் வென்றுள்ளார்.

அவரது இந்த வெற்றி உலகளவில் பலரை ஊக்கப்படுத்தி உள்ளது. 60 வயதில் அழகி போட்டியில் வென்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை, அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அழகுக்கு வயது வரம்பு இல்லை. தடைகளை தாண்டி முன்னேற முடியும் என்பதை அனைத்து பெண்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார்.

வரும் செப்., 28ம் தேதி, ‘மிஸ் அர்ஜென்டினா’ அழகி போட்டி நடக்கவுள்ளது. இதில் அலெஜாண்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் வெற்றி பெறும் பட்சத்தில், சர்வதேச அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்.

உலக அழகி போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை என, மிஸ் வேர்ல்ட் அமைப்பு கடந்த ஆண்டு அறிவித்தது. முன்னதாக, 18- – 28 வயதுடைய பெண்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.