போலித்தேன் விற்பனை செய்தவர்கள் பொலிசாரிடம் வசமாக பிடிபட்டனர்.

மடுத் தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் விற்பனை செய்யப்பட்ட போலி தேன் போத்தல்கள் அழிப்பு: விற்பனையார்கள் கடும் எச்சரிக்கையின் பின் விடுதலை

மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் விற்பனை செய்யப்பட்ட போலித் தேன் போத்தல்கள் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு இன்று அழிக்கப்பட்டுள்ளன.

மன்னார், மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விற்பனை செய்யப்படும் தேன் போத்தல்கள் போலியானவை எனவும், அவை தேன் அல்ல. சீனிப் பாணியை காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து பொலிசாரும், பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த வீதியில் மேறட்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 5 குழுக்களாக பிரிந்து வவுனியா, மெனிக்பாம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி, தேன் என்பவற்றை கலந்து காய்ச்சி அதனை தேன் எனக் கூறி போத்தலில் அடைத்து விற்பனை செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டதுடன், போலி தேன் போத்தல்களும் மீட்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையிலும், அவர்களது வயதினைக் கருத்தில் கொண்டும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாது கடும் எச்சரிக்கையின் பின் விற்பனையில் ஈடுபட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டதுடன், போலித் தேன் போத்தல்களும் அழிக்கப்பட்டன.

 

Leave A Reply

Your email address will not be published.