“சம்பியனானது கோளாவில் காந்தி கிரிக்கட் அணி”

திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களை சேர்ந்த பலம்வாய்ந்த 32 அணிகள் பங்குபற்றிய ‘பிறைட் வெற்றிக்கிண்ணத்திற்கான அணிக்கு 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின்  இறுதிப்போட்டியில் இன்றையதினம் திருக்கோவில் உதயசூரியன் அணியினை வீழ்த்தி இறுதிப்பந்துவீச்சில் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகம்.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காந்தி அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் உதயசூரியன் அணி 5 ஓவர்கள் நிறைவில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காந்தி அணியினர் இறுதிப்பந்துவீச்சில் 6 ஓட்டங்களை பெற்று ‘த்ரில்’ வெற்றியை பெற்றுக்கொண்டார்கள்.
துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டதோடு இறுதிப்பந்துவீச்சில் 6 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திய கோளாவில் காந்தி அணியின் கிரிக்கட் அணித்தலைவர் ரிலுஜன் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.

Sathasivam Nirojan

 

Leave A Reply

Your email address will not be published.