மயங்க் அகர்வால் சதம், கிங்ஸ் லெவன் அணியினர் 223 ஓட்டங்கள் குவிப்பு.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இன்று சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. ராஜஸ்தான் அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர் நீக்கப்பட்டு ஜோஸ் பட்லர், அன்கித் ராஜ்பூட் தேர்வாகினர்.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி தலைவர்  ஸ்டீவ் ஸ்மித் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (106), கேப்டன் லோகேஷ் ராகுல் (69) கைகொடுக்க, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் (13), நிகோலஸ் பூரன் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.