ஈரான் அதிபரின் மறைவை ஒட்டி , இன்று தேசிய துக்க தினம்.

ஈரான் அதிபரின் திடீர் மரணம் காரணமாக இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்படும் என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹின் மற்றும் பலர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

அங்கு பயணம் செய்த ஜனாதிபதி உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.