ஜனாதிபதியின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெறும் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பின் பேரில் , அவர் இந்த வருட இறுதியில் இலங்கை வரவுள்ளார்.

இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள Starlink திட்டத்தின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.