தகுதிச்சுற்று 1ல் ஐதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதி போட்டிக்கு கோல்கட்டா அணி எளிதாக முன்னேறியது.

ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு கோல்கட்டா அணி எளிதாக முன்னேறியது. தகுதிச்சுற்று 1ல் ஐதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியாவில் 17 வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று ‘பிளே ஆப்’ சுற்று துவங்கியது. ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் நடந்த ‘தகுதிச்சுற்று-1’ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த கோல்கட்டா (20), ஐதராபாத் (17) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணி துவக்கத்திலேயே ‘காஸ்ட்லி’ ஸ்டார்க் வேகத்தில் அதிர்ந்தது. இவரது முதல் ஓவரின் 2வது பந்தில் அபாயகரமான ஹெட் (0) போல்டானார். அபிஷேக் (3) விரைவில் அவுட்டானார். ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் குமார் (9), ஷாபாஸ் அகமது (0) வெளியேறினர். பின் திரிபாதி, கிளாசன் இணைந்து போராடினர்.

ஐந்தாவது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்த போது, வருண் சக்ரவர்த்தி சுழலில் கிளாசன் (32) அவுட்டானார். திரிபாதி (55), வீணாக ரன் அவுட்டாக போட்டியில், திருப்பம் ஏற்பட்டது. ஹர்ஷித் ராணா, அப்துல் சமதுவை (16) வெளியேற்றினார். கம்மின்சை (30), ரசல் அவுட்டாக்கினார். ஐதராபாத் அணி, 19.3 ஓவரில் 159 ரன்னுக்கு சுருண்டது. விஜயகாந்த் (7) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் ஸ்டார்க் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் கைப்பற்றினர்.

கோல்கட்டா அணிக்கு குர்பாஸ் (23), நரைன் (21) ஜோடி வேகமான துவக்கம் கொடுத்தது. பின் இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ஜோடி சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

ஹெட் வீசிய 14வது ஓவரில் முதல் 4 பந்தில் 6, 4, 6, 6 என ஸ்ரேயாஸ் விளாச, கோல்கட்டா அணி (13.4 ஓவர்) 164/2 ரன் எடுத்து வெற்றி பெற்று, நான்காவது முறையாக பைனலுக்குள் (மே 26, சென்னை) நுழைந்தது. ஸ்ரேயாஸ் (58), வெங்கடேஷ் (51) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐதராபாத் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று ‘எலிமினேட்டர்’ போட்டியில் வெல்லும் அணியுடன் தகுதிச்சுற்று 2ல் (மே 24, சென்னை) மோத வேண்டும். இதில் வென்றால் பைனலுக்கு முன்னேறலாம்.

Leave A Reply

Your email address will not be published.