நெல்லிக்காய் குழம்பு செய்யும் முறை.

விட்டமின் சி சத்து அதிகம் கொண்ட நெல்லிக்காயை நம்முடைய உணவில் நாம் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி என்பது அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு எந்த அளவிற்கு நன்மைகள் ஏற்படுகிறதோ அந்த அளவிற்கு இந்த நெல்லிக்காயிலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நெல்லிக்காயை வீட்டில் இருப்பவர்கள் யாரும் அந்த அளவிற்கு விரும்பி சாப்பிடுவது கிடையாது.

அப்படிப்பட்டவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் நெல்லிக்காயை வைத்து தொக்கு செய்து கொடுத்தோம் என்றால் இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்து டிபன் ஐட்டத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். நினைக்கும்போதே நாக்கில் எச்சில் ஊரும் அளவிற்கு அற்புதமான சுவை கொண்ட நெல்லிக்காய் தொக்கை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் நெல்லிக்காய் – 10 வெந்தயப் பொடி – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 எம்எல் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை முதலில் நெல்லிக்காயை சுத்தமாக தண்ணீரை ஊற்றி கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் நெல்லிக்காய்களை வைத்து அதிக தீயில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்து விட வேண்டும். நெல்லிக்காய் ஆறிய பிறகு அதனுள் இருக்கும் கொட்டையை மட்டும் தனியாக எடுத்து ஒன்றிரண்டாக நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகை போட வேண்டும். கடுகு வெடித்ததும் கருவேப்பிலை, பெருங்காயத்தை போட்டு பெருங்காயம் பொரிந்ததும் உடனேயே வேக வைத்திருக்கும் நெல்லிக்காயும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போன்றவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். நெல்லிக்காய் முதலில் எண்ணெய் அனைத்தையும் உறிஞ்சி விடும். பிறகு நெல்லிக்காய் வேக வேக நெல்லிக்காயில் இருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இந்த சூழலில் வெந்தய பொடியை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் பிரட்டி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் நெல்லிக்காய் தொக்கு தயாராகி விட்டது.

இதை வெரைட்டி ரைஸ் அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். வளரும் பிள்ளைகளுக்கு சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த நெல்லிக்காய் தொக்கை பயன்படுத்தி நெல்லிக்காய் சாதம் போல் செய்து தரவும் செய்யலாம். இதையும் படிக்கலாமே: ஸ்ட்ரீம் சப்பாத்தி மசாலா ரோல் செய்முறை அற்புத சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை இந்த முறையில் தொக்காக செய்வதன் மூலம் வேண்டாம் என்று யாரும் சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.