ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து – கொல்கத்தா உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

மேற்கு வங்கத்தில் 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஓபிசி சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012- மேற்கு வங்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து நேற்று நீதிபதிகள் தபப்பிரதா சக்ரவர்த்தி மற்றும் ராஜசேகர் மந்தா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதன்படி 2010-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி முதல் மே 11, 2012 வரை 42 வகுப்பினரை ஓபிசி-களாக வகைப்படுத்தும் மாநில அரசின் நிர்வாக உத்தரவு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே, மார்ச் 5, 2010-க்குப் பிறகு இந்த 42 பிரிவினருக்கு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனால் மேற்கு வங்கத்தில் 5 லட்சம் ஓபிசி சான்றிதழ்கள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த சான்றிதழ்கள் மூலம் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டவர்களுக்கு இந்த உத்தரவு பாதிக்காது என்றும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு மம்தா பானர்ஜி கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார்.

இந்தநிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இத்தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார்.

மேலதிக செய்திகள்

திசைகாட்டிக்கு (NPP) அச்சிடப்பட்ட பொருளாதாரக் கொள்கை ஒன்று இல்லை.. வாயால் சொல்வதே கொள்கை..- நளிந்த ஜயதிஸ்ஸ (Video)

பிரிட்டிஷ் பிரதமர் திடீர் தேர்தலுக்கு அழைப்பு

ரைசியின் கடைசி சில நிமிடங்களைப் பற்றி ரைசியோடு பயணித்த தலைமை அதிகாரி

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்ற தாய்!

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிப்பு – வெடிபொருள்கள் இருக்கின்றன என்று காரணம் கூறுகின்றது இராணுவம்.

புத்தளத்தில் மரங்கள் வீழ்ந்து இரு பெண்கள் பரிதாபச் சாவு.

பலாங்கொடையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் மரணம்!

கிராம அலுவலர்களின் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்! – நாடாளுமன்றில் அநுரகுமார வலியுறுத்து.

இங்கையில் நீதி மரணித்துவிட்டது! பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது!! – சிறீதரன் எம்.பி. காட்டம்.

‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூரு அணி பரிதாபமாக வெளியேறியது.

பிரிட்டன் ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல்.

உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.