ரைசியின் கடைசி சில நிமிடங்களைப் பற்றி ரைசியோடு பயணித்த தலைமை அதிகாரி

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான கடைசி சில நிமிடங்களை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் தலைமை அதிகாரி கோலம் ஹொசைன் எஸ்மைலி வெளியிட்டுள்ளார்.

3 ஹெலிகாப்டர் குழு அஜர்பைஜான் எல்லையில் இருந்து பயணத்தை தொடங்கி 45 நிமிடங்களில் புறப்படும் வரை வானிலை நன்றாக இருந்தது எனவும் , மற்ற இரண்டு ஹெலிகாப்டர்களும் ரைசி இருந்த ஹெலிகாப்டரை நடுவில் பறக்க விட்டு , இரு புறமாக பயணித்தாக தெரிவித்துள்ளார்.

முன்னே மேகம் சூழ்ந்துள்ளதால் விமானத்தை உயர்த்துவதாக ரைசி பயணித்த விமானத்தின் பைலட் ரேடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதன்படி, மற்ற இரண்டு விமானங்களும் எழும்பியதை தான் பார்த்ததாகவும், நடுவில் இருந்த விமானம் சுமார் முப்பது நொடிகளில் காணாமல் போனதாகவும் எஸ்மாயிலி கூறுகிறார்.

ஹெலிகாப்டரை தேடுவதற்காக அப்பகுதியை பலமுறை வட்டமிட்டோம் , ஆனால் மேக மூட்டத்தால் எதுவும் தெளிவாக தெரியவில்லை. அவர்களை வானொலி மூலம் தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

ஹெலிகாப்டரில் இருந்த தப்ரிஸின் இமாம் முகமது அலி அல்-ஹஷேம் வானொலிச் செய்தியைக் கொடுத்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறியதாக எஸ்மாயிலி கூறுகிறார். எனினும், சில மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார் என்றார் அவர்.

விபத்து நடந்த மறுநாள் காலை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் வந்தனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது என்றார் எஸ்மாயிலி.

Leave A Reply

Your email address will not be published.