பிரிட்டன் ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல்.

ஜூலை 04-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் அறிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.

இந்நிலையில் நேற்று அமைச்சரவை கூட்டம் கூடியது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஜூலை 4 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி கூறியது, பிரதமர் எப்போது தேர்தலை அழைத்தாலும் நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.