HIV வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

எச்.ஐ.வி வைரஸை பலவீனப்படுத்தும் புதிய தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசி மூலம் உடலினுள் நுழைந்த எச்.ஐ.வி வைரஸை இனங்கண்டு பலவீனப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தடுப்பூசி மூலம் உடலில் புதிய ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுவதுடன், புதிதாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் எச்ஐவி வைரஸை பலவீனப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பயன்படுத்தி இந்த புதிய தடுப்பூசி மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சோதனைகள் மூலம் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்ததாக தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.